தன் கணவன் தன் சுகத்தில்
தன் மனம் வேறானதுபோல்
- பொதிகைச்சித்தர்
இது ஒன்றும் புதிதில்லை நண்பா
பொதுதான் எல்லாத்துக்கும்.
'பெட்டைப்புலம்ப' லென்பான் பாரதி
'நபும்சக கோப' மென்பான் பித்தன்
மனிதாபிமானங் கசியக் கசியக் கவிதை பண்ணும்
அவனுக்கு வாய்த்த ஜீவனோபாயமோ
லேவாதேவி.
கதைபண்ணும் இன்னொருத்தனுக்கோ
காக்கிச்சட்டை.
கூலிக்கு மாரடிததுக் கோழிமுட்டை மயிர்புடுங்கி
என்னம்மோ ஒரு எழவு உத்தியோகம்
அவனவனுக்கும்.
மொழிபெயர்தேயச் சஹாராக்களில்
அடகுபோன ஜீவிதத்தால்
இளமையில் காயும் சகஜீவிகள்.
எதைஎதை எல்லாம்
குப்பை செத்தை பார்த்தீனியம் என்பேனோ
அதை அதையே புத்தகம் என்பதாய்
விற்றுத் தொலைத்தும் வாடகைக்கு விட்டும்
குப்பை கொட்டும் நான்.
மறுதலிக்கப்பட்ட அப்பிரதிகளை வெளியிட
ஆண்விபச்சாரிகம் பண்ணும் அவன்
எழுத்துச்சோரம் போகும் இன்னொருத்தன்
அட இப்படி எதுவானால் தானென்ன
நமக்கு விதிக்கப்பட்ட ஜீவனோபாயம்.
நம்மைப்போலவே இப்படித்தான் நண்பா
நமதந்தச் சக மனுஷிக்கும்
கதியேதுமின்றி விதிக்கப்பட்ட ஜீவனோபாயமாய்
இது ஒன்றும் புதிதில்லை நண்பா
பொதுதான் எல்லாத்துக்கும்
துணையோடு புணரும்போது
மனபிம்பம் வேறுவேறாகும்.
(காலக்குறி:ஜன - 96)
Thursday, February 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)




1 comments:
யாரோ போல் பார்த்த பார்வை ...
எங்கேயோ தொலைந்த சிரிப்பு ..!
பிறை புன்னகையில் கிரகணம் ;
கண்கள் பார்த்து பேசும் சொற்கள்
விளம்பர ஹோர்டிங்
பார்த்தபடி செல் போனில் பேசும் பாவனையில்
மிச்சமிருக்கிறதா
நெஞ்சில் என் நகத் தழும்பு ?
முயற்சித்து இருக்கிறாய்
உன் மனைவிக்கு நாம் தேர்ந்தெடுத்த
மோதிரத்தை அணிவிக்க
சுண்டு விரலிலும் சதை பிதுங்க....
நிகோடின் படிந்த உதடுகள்
கடை விழியில் உதிரக் கோடுகள்
நிறைய குடிக்கிறாய் போல...
உன்னையும் சேர்த்து
புதைத்திருக்கிறேன்
மார்பிரண்டும் பிரமிடுகளாக
அச்சம் யாதெனில்
சுரக்கும் பாலில் செத்த காதல் கலந்து
என்னையும்
பூதனை ஆக்கி விடுமோ என்பதே.....
இனியேனும் உன் மனைவியை
புணர்கையில் என்னை நினைக்காதே
உன் மகளுக்கு எப்படியோ விழுந்திருக்கிறது
எனது
சாயல்...!
Post a Comment