1993-ல் சவுதிஅரேபியா தலைநகரான ரியாத்தில் எழுத்தின் தீவிர வேட்கையுடன் தனியாக நடத்தப்பட்டுவந்த 'அறிவின் தொல்பொருளியல்' என்கிற கையெழுத்து பத்திரிக்கை அதை அப்படிக்கூட சொல்லமுடியாது தானே எழுதி தானே படித்துக்கொள்ளும் ஒரு சுயமோக வேட்கையாக எழதப்பட்டதே அது. சினிமா விமர்சனம் துவங்கி நீலப்படம் பற்றிய கட்டுரைகள் என மொத்தம் 4 கட்டுரைகள். அதன்பின் பால்யகால நண்பனாக துவங்கி ஒத்த கருத்துடன் இயங்கிவந்த அ.ஜ.கான் வந்து சேர்ந்தான். அவனது முன்முயற்சியில் துவங்கப்பட்டதே காலக்குறி.
முதல் இதழ் நகலச்சு இதழாக மார்ச்சு 1994-ல் வெளியடப்பட்டது. 10-பிரதிகள் மட்டுமே. இந்தியாவில் உள்ள இலக்கிய நண்பர்களுக்கு அனுப்பி வைப்போம். சவுதி அரேபியாவில் கிடைத்தவற்றை வைத்து எழுதுவதும் மொழிபெயர்ப்புகளும் என ஆரம்பித்து ஒரு சில நண்பர்களின் எழத்துக்கள் இந்தியாவில் இருந்து வந்தவை என காலக்குறி தொடர்ந்து 7 இதழ்கள் நகலச்சாக ரியாத்திலிருந்தும் 8-வது இதழ் முதலாக அ.ஜ.கானை ஆசிரியராகக் கொண்டு அச்சில் சென்னையிலிருந்தும் வெளிவந்தது. 14-வது இதழ் ஜனவரி 2002-ல் வந்தது. அதன்பின் அது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுவிட்டது. அதனை முறையாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதி அல்லது 2009-துவக்கத்தில் அதனை முறைப்படுத்தி வெளியிடலாம் என உள்ளோம்.
இதுவரை வந்துள்ள இதழ்களை இங்கு பகுதி பகுதியாக வெளியிடப்படுகிறது. பரவலான வாசகர்களை சென்றடையும் நோக்கம் மட்டுமின்றி இதனை பதிவேற்றுவதன்மூலம் எதிர்காலத்தில் காலக்குறி தனியான ஒரு இணையப்பக்கத்தை துவக்குவதற்கும் பயன்படும் என்பதாலும் தொடர்ந்து காலக்குறியில் பிரசுரித்த எழத்துக்கள் வெளியிடப்படுகிறது.
ஆலொசனைகளும் கருத்துக்களும் வறவேற்கப்படுகிறது. இவை காலக்குறியை முறைப்படுத்திக் கொண்டுவர பயனுள்ளதாகவும் காலக்குறியின் உள்ளடக்கங்கள் பற்றிய ஒரு சுயவிமாசனமாகவும் அமையலாம்.
அன்புடன்
ஜமாலன்.
Subscribe to:
Post Comments (Atom)




5 comments:
நான் காலக் குறி பற்றி கேள்விப் பட்டிருக்கிறேனே அன்றி, படித்த ஞாபகமில்லை. என்னைப் போன்ற காலக் குறியைப் படிக்காதவர்களுக்கு இந்த வலையேற்றம் உபயோகமாயிருக்கும்.
அதனை முறையாக வெளிக்கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். இந்த ஆண்டு இறுதி அல்லது 2009-துவக்கத்தில் அதனை முறைப்படுத்தி வெளியிடலாம் என உள்ளோம்.//
ஜமாலன், முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள் !
வாழ்த்துக்கள் ஜமாலன்
முயற்சிகள் வெற்றியடைய நல் வாழ்த்துகள் ஜமாலன்
சுந்தர், கண்ணன், அனானி மற்றும் சீனாவிற்கு நன்றி.
Post a Comment